கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் சட்டமன்ற தொகுதியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஏழாவது ஆண்டு நினைவஞ்சலி..
முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்டம் திமுக மாவட்ட செயலாளருமான வி.செந்தில் பாலாஜி தலைமையில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஏழாவது ஆண்டு நினைவஞ்சலி பல்வேறு இடங்களில் கலைஞரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
வெண்ணமலை பகுதியில் ஆதரவுற்ற இல்லத்தில் அன்னதான உபசரிப்பு நடைபெற்றது.பின்னர் கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்னர் அங்கிருந்து அமைதிப் பேரணியாக கரூர் பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.
ஏராளமான திமுக தொண்டர்களுடன் அமைதிப் பேரணி,பல்வேறு இடங்களில் பல்வேறு அணிகள் முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் திருவுருப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சிறப்பு அழைப்பாளர் .திமுக வின் மூத்த நிர்வாகி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நெருங்கிய நண்பர் ராஜகோபால்.முன்னிலை வகித்தார்.
உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி ,மேயர் கவிதா கணேசன், துணைமேயர் சரவணன்,மாநகர செயலாளர் மண்டல குழு தலைவர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நகரம், ஒன்றியம் என பல்வேறு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.