செய்தியாளர் மண்ணை க. மாரிமுத்து.
திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, புலிவலம், சோமரசம்பேட்டை, மண்ணச்சநல்லூர், சமயபுரம், இனாம்குளத்தூர் ஆகிய பகுதிகளில் காவல்துறை சோதனை நடத்தியது.
இச்சோதனையின் போது, அப்பகுதியைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து சுமார் 1000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை திருச்சி மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.