காரமடையில் செயல்பட்டு வரும் எஸ் வி ஜி வி பள்ளியில் கோகுலாஷ்டமி விழா
கொண்டாடப்பட்டது . சின்னஞ்சிறு பாதம் பதித்து கோகுலத்தில் ஆனந்தம் பொங்கும் வகையில் எஸ்விஜிவி பள்ளியின் 120க்கும் மேற்பட்ட சின்னஞ்சிறு மழலைகள் கிருஷ்ணர் ராதை வேடமணிந்து கண்கவர் நடனமாடியும் விளையாட்டுகள் விளையாடியும் மகிழ்ந்தனர்.
புல்லாங்குழல் ஓசையில் பூவுலகமே மயங்கிடும் என்பதற்கு ஏற்ப எஸ்விஜிவி மழலைகள் ஆடல்பாடல் நிகழ்ச்சி நடத்தி கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுத்தனர். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பழனிச்சாமி நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், பள்ளிமுதல்வர் சசிகலா, செயலர் ராஜேந்திரன், பொருளாளர் ரத்தினசாமி, அறங்காவலர்கள் தாரகேஸ்வரி, ராஜேந்திரன், வேலுச்சாமி, நிர்வாக அலுவலர் சிவ சதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.