தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் தனியார் பள்ளியில் கண் சிகிச்சை முகாம்.
கோவை சங்கரா கண் மருத்துவமனை ருத்ராவதி பேரூராட்சி துணைத் தலைவர் சின்னமணி (எ) மோகன் ராஜ் ஸ்ரீ குருஜி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, குண்டடம் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆதரவுடன் ஏழை எளிய மக்களுக்கான இலவச கண் மருத்துவ முகாம் இன்று சனிக்கிழமை காலை குண்டடம் ஸ்ரீ குருஜி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.பேரூராட்சி துணைத் தலைவர் சின்னமணி என்கிற மோகன்ராஜ் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீ குருஜி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி தாளாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வைத்தார் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு கண் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்