இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவரும் மாணவிகள் “அனுபவ கற்றல் திட்டம்” (Experiential learning Program) பயிற்சியின் கீழ் மரக்கன்றுகள் மற்றும் கண்ணாடி பாட்டீல் ஓவிய கண்காட்சி ஆகஸ்ட் 7 தேதி முதல் 9 தேதி வரை கல்லூரி நுழைவு வாயில் முன்பாக நடைபெறுகிறது.
இதில் பழக் கன்றுகளான நாவல், நெல்லி, முந்திரி, பலா, மா மற்றும் அலங்கார செடிகளான குரோட்டன் செடி, மஞ்சள் அலமெண்டா, கிளெரோடென்றான், காகிதப்பூ, செம்பருத்தி, ரிப்பன் செடி, கொண்றை மரம், மஞ்சள் வாகை, மணி ப்லாண்ட், ரியோ செடி போன்றவைகள் மாணவர்கள் படிக்கும்போதே வேலை செய்து சுயதொழில் அனுபவம் அதன்மூலம் வருமானம் ஈட்டும் திட்டமாக செயல்படுத்தி வருகின்றனர்
இதனை ஒரு கண்காட்சியாக கமுதி – முதுகுளத்தூர் சாலையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மிக குறைந்த விலையில் விற்கப்பட்டுவருவதால்
பொதுமக்கள் அதிகளவில் வாங்கி பயன்பெருகின்றன.