முள்ளக்காடு முதல் புன்னக்காயல் வரை உப்பளங்களை அபகாித்து கப்பல் கட்டும் தளம் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறுத்தவேண்டும். தூத்துக்குடி தமிழக வெற்றி கழகம் கோாிக்கை


தூத்துக்குடி இந்தியாவில் தயாராகும் உப்பு உற்பத்திகளில் முதன்மை பெற்ற மாநிலமாக தமிழ்நாடும் அதிலும் குறிப்பாக முத்துநகா் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி உப்புக்கு உலக அளவில் தனி மாியாதை உண்டு. இந்த உப்புக்கு பலர் முன்பனம் ெசலுத்தி கடந்த காலத்தில் ஏற்றுமதி செய்து வந்தனா்.

ஆனால் சமீபகாலமாக பல்வேறு வகைவில் உப்பு தொழில் நலிவடைந்து வருவது மட்டுமின்றி அதில் போதிய வருமானம் இல்லாத நிலையும் உருவாகி வருகிறது. அதனால் தான் குஜராத்திலிருந்து கடந்தமாதம் கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு உப்பு வந்து இறங்கியது. அதை பலா் பயன்படுத்தியுள்ளனா்.

கடந்த காலத்தில் குஜராத் மோடியா தமிழகத்தின் லேடியா என்று ஓரு கை பார்த்துவிடுமோம் சபதம் ஏற்று வெற்றி கண்ட முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா வழிநடத்திய தமிழகத்தின் கடைசி மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தின் அவலநிலையை எண்ணிப்பாா்த்தால் வேதனையாக இருக்கிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாநகர வெற்றிக்கழக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஆனந்தகுமாா் கூறுகையில் கடற்கரையின் ஓரு பகுதியான மாநகரம் மற்றும் புறநகா் சார்ந்த முள்ளக்காடு முதல் புன்னக்காயல் வரை உள்ள உப்பளங்களை கப்பல் கட்டும் தளம் என்ற பெயரில் நிலத்தை அபகரிக்க அரசு தற்போது முயற்சி செய்து வருகிறது முள்ளக்காடு பகுதியில் மட்டும் சுமார் 500 ஏக்கர் இடம் கையகப்படுத்த அரசுத்துறையினா் முயற்சி செய்து வருகின்றனா்.

இதில் மிகவும் வருத்தப்படக் கூடிய விஷயம் என்னவென்றால் மிகவும் நடுத்தர மற்றும் ஏழை தாழ்த்தப்பட்ட பொதுமக்களுக்கு அரசு வழங்கிய குறைந்த அளவு இடம் வைத்துள்ள ஏழை மக்களின் இடமும் இதில் சேர்ந்து பறிபோகிறது

இதனால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாக மாறும் சூழ்நிலை உள்ளது. உப்பளத்தை அளிக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. உலக அளவில் உப்புக்கு பெயர் பெற்ற தூத்துக்குடி தற்போது உப்புத்தொழில் அழிந்து போகும் வகையில் கப்பல் கட்டும்தளம் என்ற பெயரில் நிலம் கையகப்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது

இதன் பின்பலத்தில் தமிழக முதலமைச்சாின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இதில் சம்பந்தபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. முள்ளக்காடு பகுதியில் மட்டும் 500 ஏக்கர் என்றால் கடற்கரை பகுதி முள்ளக்காடு முதல் புன்னக்காயல் வரை எத்தனை ஆயிரம் ஏக்கர் இருக்கும் என்று சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு இடம் உள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருக்கு வரும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

அதன் மூலம் மத்திய மாநில அரசிற்கு பெருமளவில் பல்வேறு வகையின் வருமானம் இழப்பும் ஏற்படும் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவது தான் எங்களது இலக்கு என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில் இந்த பிரச்சனையில் பிரதமா் நரேந்திர மோடியும் எல்லோருக்கும் எல்லாம் என்று திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது.

என்று கூறிவரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி அனைவருடை வாழ்வாதரத்தையும் பாதுகாப்பது மட்டுமின்றி இருப்பதை இழந்துவிடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய மாநில அரசுகள் முள்ளக்காடு முதல் புன்னகாயல் வரை இடம் கையகப்படுத்துவதை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் தமிழக வெற்றி கழக நிறுவன தலைவரும் நடிகருமான விஜய் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாநகரில் தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் மாபெரும் போராட்டம் மக்களை திரட்டி நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்

மேலும் பொதுமக்கள் மற்றும் உப்பு வியாபாரிகள் சாா்பில் வருகிற 14-ம் தேதி நடைபெறுகின்ற போராட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது உத்தரவின் பெயரில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் உடனடியாக உப்பளத்தை கையகப்படுத்துவதை தமிழக அரசும் மத்திய அரசும் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழக மாநகர நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஆனந்தகுமார் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *