கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டத்தில் புலியூர் பேரூராட்சி ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்
.
கரூர் வட்டாட்சியர் குமரேசன் வரவேற்பு உரையாற்றினார் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டம் கரூர் மாவட்டத்தில் ஜூலை 15-ம்தேதி அன்று துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின்கீழ் நோக்கமாகும்.
இத்திட்டத்தின்கீழ், கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளில் 12 முகாம்கள், நகராட்சி பகுதிகளில் 9 முகாம்கள், பேரூராட்சி பகுதிகளில் 8 முகாம்கள், வட்டார ஊராட்சிகளில் 19 முகாம்கள், புறநகர் ஊராட்சி பகுதிகளில் 12 முகாம்கள் என 60 முகாம்கள் ஜூலை 15-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். மேற்படி அரசுத் துறைகள் மூலம் நகர் பகுதிகளில் 13 துறைகளில் 43 சேவைகள், கிராமப்புறங்களில் 15 துறையில் 46 சேவைகள் மற்றும் குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான கோரிக்கை மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்படவுள்ளன.
புலியூர் பேரூராட்சியில் வார்டு எண்.1,2,3,4,5,6,7 -ற்க்கு P.K.A. திருமண மண்டபத்திலும், க.பரமத்தி வட்டாரத்தில், புன்னம் மற்றும் பவித்திரம் ஆகிய ஊராட்சிகளுக்கு புன்னம் சத்திரம் அங்காளம்மன் மண்டபத்திலும் ”உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற்றது.
புலியூர் பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரி, துணைத்தலைவர் அம்மையப்பன், ஒன்றிய செயலாளர் ரகுநாதன், மற்றும் மாமன்ற உறுப்பினர் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.