கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை துவக்கி வைத்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் பகுதியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில், தூய்மைப் பணிகள் மேற்கொள்ள ரூ. 32.89 இலட்சம் மதிப்பீட்டில் 13 புதிய மின்கல வாகனங்கள் மற்றும் ரூ2.48 இலட்சம் மதிப்பீட்டில் சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை 44 தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.