தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி துவக்கி வைத்தார்
மாணவ,மாணவிகளின் கலை மற்றும் இலக்கிய திறன்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..
கவிதை ,ஓவியம், பேச்சு உள்ளிட்ட திறன்களில் பல்வேறு தலைப்புகளிலான போட்டிகளும், மாணவர்கள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் விதமாக ஒராள் நாடகமும் நடைபெற்றது…
முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி கலந்து போட்டிகளை துவக்கி வைத்து பேசினார்..
அப்போது பேசிய அவர்,இளம் தலைமுறை மாணவர்களின் இலக்கிய திறன்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து வருவதை பாராட்டினார்..
தொடர்ந்து பேசிய அவர்,இளம் தலைமுறை மாணவர்கள் இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்வதால் சமூக நீதியை பற்றி தெரிந்து கொள்வதாகவும்,போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்க இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, இது போன்ற நிகழ்வுகள் சிறந்த பங்களிப்பதாக அவர் தெரிவித்தார்..
கலை இலக்கிய போட்டிகளில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
இதில் சிறந்த படைப்புகளை வெளிப்படுத்திய மாணவ,மாணவிகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்..
முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில்,எழுத்தாளர் கா.சு வேலாயுதன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற துணை தலைவர் புருஷோத்தமன்,,ப.பா.ரமணி,நான்சி கோமகன்,குணசேகர், ஜான்,ராஜன்,இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் மொழித்துறை தலைவர் முனைவர் காயத்ரி,மற்றும் பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாகீர்,கோவை தல்ஹா,ராதாகிருஷ்ணன், தகவல் தொழில் நுட்ப பிரிவு அபுதாகீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்…