தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் பங்கேற்பு
கோவையில் இரண்டாவது கிஸா தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி,கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்றது..
வேர்ல்டு கராத்தே பெடரேஷன் நடுவர் கணேசமூர்த்தி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற போட்டிகளுக்கான துவக்க விழாவில்,கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல்,முன்னால் மேயர் 19 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கல்பனா ,30 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா செந்தில் குமார் மற்றும் தமிழ்ழாடு கராத்தே சங்க முதன்மை தொழில் நுட்ப இயக்குனர் முத்துராஜு,கோவை மாவட்ட தலைவர் வி.எம்.சி்.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்..
தென்னிந்திய அளவில் நடைபெற்ற இதில், தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்..
போட்டிகளில் நடுவர்களாக பயிற்சியாளர்கள் செல்வராணி,ஸ்வர்ண ரேகா,அர்ஜூன்,சதீஷ் உட்பட பலர் பங்கு பெற்றனர்..