வி.கே.வி.நகர் பகுதியில் உள்ள பாலநாகம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை கோலாகலம் விழாவை முன்னிட்டு பஜனை மற்றும் பாடல்களை கேட்டு ரசித்த பக்தர்கள்
ஆடி மாத வெள்ளி கிழமைகளில் அம்மனை தரிசித்தால், அற்புத பலன்கள் கைமேல் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது இந்நிலையில் கோவை என்.ஜி.ஜி.ஓ.காலனியில் உள்ள வி.கே.வி.நகர் பகுதியில் உள்ள சக்தி பாலநாகம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடைபெற்றது..
இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து பூஜை நடைபெற்றது..
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்..
விழாவின் ஒரு பகுதியாக,வரம் தர வருகிறாள் மகாலட்சுமி எனும் தலைப்பில்,சின்மயா மிஷன் பிரம்மச்சாரி கிருஷ்ண சைதன்யா மற்றும் அவரது குழுவினர் சார்பாக ஆன்மீக பஜனை மற்றும் பக்தி பாடல்கள் நிகழ்வு நடைபெற்றது..
இதில் பிரபல சொற்பொழிவாளர் கிருஷ்ண சைதன்யா பக்தர்களிடையே சொற்பொழிவாற்றினார்..
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்…