திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து இந்திய பணத்தாள்களில் உள்ள மொழிகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியினை நடத்தியது.

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகப் பணியாளர் மீனாட்சி சுந்தரம் துவக்க உரையாற்றினார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர்,சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர்
விஜயகுமார் இந்திய பணத்தாள்களில் உள்ள மொழிகள் குறித்து பேசுகையில்,
இந்திய பணத்தாள்களில் மொத்தம் 17 மொழிகள் அச்சிடப்பட்டுள்ளன.

அவற்றில், 15 பிராந்திய மொழிகள் பணத்தாளின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளும், பணத்தாளின் முன்புறத்தில் இடம் பெற்றுள்ளன. இந்திய பணத்தாளில் அசாமி,பெங்காலி,குஜராத்தி,கன்னடம்,
காஷ்மீரி,கொங்கணி, மலையாளம், மராத்தி,நேபாளி,ஒரியா,பஞ்சாபி,
சமஸ்கிருதம்,தமிழ்,தெலுங்கு,உருது என 15 பிராந்திய மொழிகள் உள்ளன என்றார். தமிழ் இலக்கியா, விவேகா, சத்தியவாகீசன், திருவானேஸ்வரர் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *