தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
‘கோமா’ நிலையில் தமிழக சட்ட ஒழுங்கு: வாசன் கண்டனம்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் வந்த தா.மா.க தலைவர் வாசனிடம் குளத்துப்பாளையம் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனர்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கோமா நிலையில் உள்ளன என தா.மா.க தலைவர் வாசன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் அவர் நேற்று கூறியதாவது. குளத்துப்பாளையம் பகுதியில் கடந்த 23 ஆண்டாகாமல் உள்ள ஈரோடு கூட்டுறவு நுட்பாலை தற்போது சிப்காட் தொழிற்சாலையாக மாற்றப்பட உள்ளதால் விவசாயிகள் தெரிவித்தனர். சிப்காட் நிறுவனம் வந்தால் விவசாயி நிலங்கள் தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும்.
வெள்ளகோவில் மூலனூர் பகுதியில் விவசாயிகள் பாதிக்காத வகையில் சின்ன வெங்காயம் பாதுகாக்க குளிர் பாதாக் கிடங்கு அமைக்க வேண்டும் முருங்கை விலை சரி வை தவிர்க்க முருங்கை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் ரேஷன் கடைகள் பாம பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் தற்போது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கோமா நிலையில் உள்ளது.
கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை போதைப்பொருள் மற்றும் மது விற்பனை போன்ற கட்டுக்கடங்காமல் நடக்கிறது ரவுடிகள் குற்றவாளிகள் போலீசாருக்கு சவால் விடும் வகையில் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
இந்த நிலையில் மக்கள் அமைதியாக பார்க்க மாட்டார்கள் வரும் 2026 தேர்தலில் இது திமுக அரசுக்கு எதிராக மாறும் இந்த அரசு சட்ட ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்படவில்லை எனவே ஆட்சி மாற்றம் கட்டாயம் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.