கே வி முகமது அரியலூர் செய்தியாளர்:
இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் திருச்சி மாநகர் மாவட்ட 30 ஆவது ஆண்டு பேரவை சிஐடியு அலுவலகத்தில் நடந்தது கூட்டத்திற்கு வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார் சிஐடியு மாவட்ட தலைவர் சீனிவாசன் துவக்க உரையாற்றினார் வேலை அறிக்கை கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர் படித்தார் பொருளாளர் உலகநாதன் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார்
மாவட்ட குழுவிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் தலைவர் உலகநாதன் செயலாளர் சந்திரசேகர் பொருளாளர் முருகன் துணைத்தலைவர்கள் வெள்ளைச்சாமி வனஜா துணை செயலாளர்கள் வெங்கடேசன் சக்திவேல் ஆறு பேர் கொண்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர் புதிய நிர்வாகிகளை பாராட்டி கட்டுமான சங்க மாநில குழு உறுப்பினர் தோழர் அரியலூர் துரைசாமி பேசினார் புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது சக்திவேல் நன்றி கூறினார்