கரூர் செய்தியாளர் மரியான் பாபு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக, கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் இ.ஆ.ப. பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையில் சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் காவல் துறையின் சார்பாக நடைபெற்ற “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேரடியாகவும், காணொளி காட்சி வாயிலாக கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் தாந்தோணி அரசு கலைக் கல்லூரி மாணவிகள்போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. ஜோஷ் தங்கையா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி ஆணையர் கே.எம். சுதா, துணை மேயர் ப. சரவணன், உதவி ஆணையர் (கலால்) கருணாகரன், கல்லூரி முதல்வர் முனைவர் க. இராதாகிருஷ்ணன், கல்லூரி மாணவ – மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.