C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூர், அமைச்சர்கள் மாணவ,மாணவிளுடன் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று காணொளி காட்சி வாயிலாக கம்மியம்பேட்டை புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு* நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர்கள் முன்னிலையில் பள்ளி மாணவமாணவிளுடன் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, தேசிய குடற்புழு நீக்க தினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் . சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலையில் வழங்கி தொடங்கி வைத்தனர்.