தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆஸ்ரம் பள்ளி மாணவர்கள் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி அசத்தல் தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது..
இந்நிலையில் கோவையில் மண்டல அளவிலான தெற்கு குறுமைய விளையாட்டு போட்டிகள் நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது…
இதில்,கோவை தெற்கு பகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர், கோவைபுதூர்,மதுக்கரை என பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 60 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்…
14,17,19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் கைப்பந்து,கால்பந்து,கூடைப்பந்து,டேபிள் டென்னிஸ்,மற்றும் ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல்,குண்டு எறிதல், உள்ளிட்ட தடகள போட்டிகளும் நடைபெற்றன..
இரண்டு நாட்களாக நடைபெற்ற இதில்,பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் விளையாட்டு திறன்களை வெளிப்படுத்தினர் இதில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது..
இதில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளி மாணவர்கள் கைப்பற்றி சாதனை படைத்தனர்…
இதே போல 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் வர்த்திகா,சாய் ஹரினி மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் விஸ்மயா,அனமித்ரா ஆகியோர் தனி சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர்..
இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவில் கோவை மாவட்ட விளையாட்டு தலைவர் வெள்ளியங்கிரி, திருப்பூர் மாவட்ட கோ கோ அசோசியேஷன் செயலாளர் கெம்புராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்..