மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி ஆகஸ்ட் 15-
தென்காசி மாவட்டம் வல்லம் கிராமத்தில் சுதந்திர இந்தியாவின் 79 ஆவது ஆண்டு கொடியேற்று விழா வல்லம் சுன்னத்துல் ஜமாத் சார்பாக சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் அகமது மீரான் தலைமையேற்று மூவர்ணக் கொடியை ஏற்றி கொடி வணக்கம் செலுத்தினார்
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான் ஒலி முன்னிலை வகித்தார். இந்திய சுதந்திர தினத்திற்காக இஸ்லாமியர்களின் பங்கு என்ன என்பது குறித்து விளக்கமாக மௌலானா மௌலவி பார்டர் பள்ளிவாசல் இமாம் அல்தாப் சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் சீமான் கனி சேக் தாவுது ஜாபர் அலி துறையப்பா வல்லம் பஞ்சாயத்து தலைவி ஜமீன் பாத்திமா செல்லக்கனி சாகுல் ஹமீது பள்ளியின் தலைமை இமாம் சையத் அலி ஆஷிக் உட்பட ஏராளமான ஆண்களும் பெண்களும் ஜமாத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.