திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் உள்ள அலுவலகத்தில் 79- சுதந்திர தின விழாவில் ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திரதின உரையாற்றினார், நிகழ்ச்சியில் ஸ்ரீ பாடைகட்டி மகா மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கத் துணைத் தலைவர்கள் என்.மாரிமுத்து, ப. பெத்த பெருமாள், கோ.சண்முகசுந்தரம் யாதவ், துணைச் செயலாளர் வி.ஏ.வி.சூரியமூர்த்தி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், தெரு வாசிகள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.