எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே பூம்புகார் அரசு கலைக் கல்லூரியில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.கல்லூரியில் குடும்பத்தினரோடு சந்தித்து தங்களது பேராசிரியர்களுக்கு மரியாதை செலுத்தியும் மரக்கன்றுகள் நட்டும் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் பூம்புகார் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது இக்கல்லூரியில் கடந்த 1999 – 2002 ஆம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக மாணவர்கள் வாட்ஸ்அப் குழுவின் மூலம் தங்களது நண்பர்களை ஒருங்கிணைத்து பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பணிகளில் பணியாற்றி வரும் அனைத்து நண்பர்களையும் ஒன்றிணைத்து இன்று முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குறிப்பாக தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்களை கண்டுபிடித்து அவர்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்து பொன்னாடை அணிவித்தும் நினைவு பரிசுகள் வழங்கியும் கௌரவித்தனர்.
மாணவர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக கல்லூரியின் பல்வேறு பகுதிகளில் குவிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியின் நினைவாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சி குறித்து பேசிய முன்னாள் மாணவர்கள் இன்று தாங்கள் பல்வேறு பணிகளில் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்தாலும் இன்றைய தினம் தாங்கள் இக்கல்லூரியில் படித்த மாணவராக உணர்கிறோம் எங்கள் வாழ்க்கையில் இது மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மேலும் இக்கல்லூரியில் ஆசிரியர்கள் தங்களை கண்டிப்புடன் நல்வழிப்படுத்தி பயிற்றுவிட்டதால் தான் நாங்கள் இந்த அளவிற்கு உயர்ந்திடுவோம் எனவே எங்களது பேராசிரியர்களுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்