எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி ஆலயத்தில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம். தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இக்கோயில் செவ்வாய் ஸ்தலமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் சுவாமி அம்பாள் அங்காரகன் தன்வந்திரி முருகப்பெருமான் செல்வகுமார் சுவாமியாக தனித்தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
இக்கோயிலில் ஆடிக்கிருத்திகை தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானை உடன் கார்த்திகை மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சிவாச்சாரியார்கள் பால் பன்னீர் இளநீர் விபூதி சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் அதனை தொடர்ந்து சோடச தீபாராதனை நடைபெற்றது.
இதில் தருமபுரம் ஆதினம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.தொடர் விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.