திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் 79- வது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு செயல் அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி, பேரூர் திமுக செயலாளர் பா. சிவநேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், பேரூர் திமுக அவைத் தலைவர் சோம. மாணிக்கவாசகம், பொருளாளர் எல்.புருஷோத்தமன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்வமணி, ராணி சோம. மாணிக்கவாசகம், க.செல்வம், பானுமதி விசிஆர், ரம்ஜான் பீவி சிவராஜ், வீரமணி நூர்ஜஹான் ஜெகபர் அலி, ஆனந்த குமார், வசந்தி பாஸ்கர், சுமதி தர்மராஜன், அபிநயா கரிகாலன்,செல்வராணி பாஸ்கரன், அருள் முருகன், அலுவலர்கள், தூய்மை பணி மேற்பார்வையாளர் அம்பேத்கர் குமார் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி தேசிய கொடியை ஏற்றி வைத்தார், வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளர் கலைவாணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.