ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காரியமல்லம்மாள் கோவில் ஆடிப்பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் தீபாதாரணை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது திருவிழாவின் 7-ம் நாளாக நேற்று முன்தினம் இரவு கரியமல்லம்மாள் கோவில் முன்பு கிராமத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பெண்கள் 108 போற்றி மந்திரங்கள் அம்மன் துதி பாடல்களை பாடி கரியமல்லம்மாள் அம்மனை மனதார வேண்டி கூட்டு வழிபாடு செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
முன்னதாக அம்மனுக்கு 21 வகையான மூலிகை திரவிய சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது. திருவிளக்கு பூஜை முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் நேற்று பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று அதிகாலை சிறுவர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடல் முழுவதும் களிமண் சேறு பூசி விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு மேளதாளத்துடன் ஆடிப்பாடி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து இறுதியில் ஸ்ரீ கரியமல்லம்மாள் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பால்குடம், அக்னிச்சட்டி மற்றும் பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். இன்று மாலை முளைப்பாரி திருவிழா நடைபெற உள்ளது