கருங்குளம் சந்தனமாரியம்மன் கோயில் திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கருங்குளம் அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு நிறைவுநாளான இன்று கிடாவெட்டு திருவிழாவானது சிறப்பாக நடைபெற்று வருகிறது
கோயில் மற்றும் சுற்றியுள்ள வயல்வெளிகளில் ஏராளமான மக்கள் ஆடுகள் சேவல் கோழி முதலான உயிரினங்களை அம்மனுக்கு பலியிட்டு பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
மக்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது அசைவ பொது அன்னதானமும் நடைபெற்று வருகின்றது இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்காணோர் கலந்து கொண்டனர்