தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு (NFB), வரதராஜபுரம் வளாகத்தில் ஆகஸ்ட் 15 அன்று 79வது சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் NFB சார்பில் திரு. சதாசிவம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த டாக்டர் ஹெச். டார்வின் மோசஸ், தொழில்முறை சமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகள் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் நபர்களை வலுப்படுத்தியுள்ளார். குறிப்பாக பார்வைத் திறனற்ற சமூகத்திற்காக அவர் வழங்கிய பங்களிப்பு பெரிது.
அவர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, பார்வைத் திறனற்ற நபர்களுக்கு வெள்ளைகோல்(White Canes) வழங்கி கௌரவித்தார்.