கோவை மாநகர மாவட்டம், கெம்பட்டி பகுதி 80வது வார்டில் செட்டி வீதியில் உள்ள குப்பண்ண தோட்டம் அருகில் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில், கோகுலாஷ்டமி விழா ஆன்மீகத் திருவிழாவாக இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பக்தர்களின் திரளான பொதுமக்கள் பங்கேற்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் ஆராதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பக்தர்களுக்காக அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா கவுர் சேவா டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக , கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் திரு பெ. மாரிசெல்வன் பங்கேற்று, அன்னதானம் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
பொதுமக்களுக்கு நேரில் சென்று நல்வாழ்த்துக்களையும் பகிர்ந்தார் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த ஆன்மிக நிகழ்வு, பக்தி பூர்வமாகவும், சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்துவதாகவும் அமைந்தது.
இந்நிகழ்வில் பகுதி பொறுப்பாளர் என்.ஜே.முருகேசன், வார்டு செயலாளர் நா.தங்கவேலன், மற்றும் பன்னீர்செல்வம் புயல் சரவணன் சந்துரு, வானவன் மணி, மோகன் மற்றும் கழக நிர்வாகிகள் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.