திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டிட்டோஜாக் வலங்கைமான் வட்டார போராட்டக் குழு தலைமைகளில் ஒருவரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார தலைவருமான கோ. பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அனைத்து சங்க முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர் கோ.வீரமணி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் த.வீரரமணி, மாவட்ட செயலாளர் ராமலிங்கம் ஆகியோரின் முதன்மை உரையுடன், அனைத்து சங்க பொறுப்பாளர்களும் தங்கள் கருத்துக்களை ஆழமாக விவாதிக்க பட்டது. முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.இம்மாதம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அனைத்து சங்க உறுப்பினர்களும் பள்ளிக்குச் செல்லாமல் போராட்டத்தில் குதித்து அவரவர் வீட்டில் இருந்து தமிழகம் முழுவதும் போராட்டத்தால் அரசை ஸ்தம்பிக்க செய்ய வேண்டுமெனவும், மேலும் வலங்கைமான் ஒன்றியத்திற்கு என குறைந்தது 100 நபர்கள் சென்னை முற்றுகை போராட்டத்தில் அதே ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்று கலந்து கொள்வது எனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. போராட்டத்தில் கலந்து கொண்டு சென்னை முற்றுகை போராட்டத்திற்கு செல்லுகின்ற நபர்களுக்கு போக்குவரத்து வாகனங்கள் மற்றும் உணவு, ‌இருப்பிட வசதிகளை செய்து தருவதற்கான நிதி தலா ரூ. 200 அனைத்து உறுப்பினர்களிடம் இருந்து பெறுவது எனவும், சென்னை முற்றுகை போராட்டத்திற்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் செலுத்தும் 200 ரூபாயை தவிர வேறு எதுவும் செலுத்த தேவையில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டது.

வருகின்ற 20 ஆம் தேதி 5 குழுக்களாக அனைத்து இயக்க பொறுப்பாளர்களும் பிரிந்து அனைத்து பள்ளிகளுக்கும் சென்று உறுப்பினர்களை நேரில் சந்திப்பது எனவும், அப்பொழுது உறுப்பினர்களுக்கான போராட்ட நிதியான ரூ.200 யை வசூலிப்பது எனவும் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

  1. 22 ஆம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டத்திற்கு பேரூந்து வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு போராட்ட களத்திற்கு வருகின்ற வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்வதென ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. 4. வருகின்ற 19.08.2025 செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் வலங்கைமான் வட்டார டிட்டோஜாக் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
  2. 5. அனைத்து இயக்க உறுப்பினர்கள் எவ்வித பாகுபாடு இன்றி ஒரு நாள் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும். கோட்டை நோக்கிய முற்றுகைக்கு வருபவர்கள் ஆண், பெண் என்ற வித்தியாசம் இன்றி அனைவரும் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு, வழக்கம்போல் அனைத்து சங்க உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வலங்கைமான் வட்டார டிட்டோஜாக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *