கோவை அமைதி வேண்டி கோவை 5கே மராத்தான் சார்பில் கொடிசியா மைதானத்தில் மாபெரும் மாரத்தான் நடைபெற்றது. இதற்கு கோவை மாரத்தான் அசோசியேசன் தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் பூபேஸ், மாவட்ட பொருளாளர் சுடலைமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாகக ராயல்கேர் மருத்துவமனை சி.இ.ஓ.டாக்டர் மணிசெந்தில், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த ஆறுச்சாமி, தமிழ்நாடு வர்த்தகர் சங்கமம் செய்தித் தொடர்பாளர் தனிஸ், கால்மான் மாவட்ட செயலாளர் தங்கராஜ், மதிமுக. விஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மண்டல பொருளாளர் சசி, வர்த்தக சங்கமம்சரவணன், குமாரசாமி, டிரீம்ஸ் வின்சென்ட், எஸ் எஸ் சிஸ்டம் சுப்பிரமணி நந்தினி ஆதி ஐஏஎஸ் அகாடமி செண்பகம் லோகநாதன் கார்த்திகேயன் நடன அமைப்பைச் சேர்ந்த சரவணன் நவீன் அசோக் பூஜா புரமோட்டர் ஊழியர்கள் யோகா மாஸ்டர் சத்திரபதி, வீர சீனு மந்திரம் உள்பட பலர் கலந்து கொண்டனர் மாரத்தான் போட்டியில் முதல் பரிசை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீரர் நரேந்திரசிங் பெற்றார்.
இரண்டாம் பரிசை கேரளாவைச் சேர்ந்த தடகள வீரர் அபித், மூன்றாம் பரிசை கோவை தடகள வீரர் சதீஷ்குமார் ஆகியோர் பெற்றனர். இவர்களுக்கு தலா 10 ஆயிரம் 5 ஆயிரம் 2 ஆயிரம் ரொக்க பரிசாக வழங்கப்பட்டது,
இந்த மராத்தான் போட்டி விழாவிற்கு பெரிதும் உதவி புரிந்த தமிழ்நாடு வர்த்தகர் சங்கமம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ், ஸ்ரீ பூஜா புரமோட்டர்ஸ், ஸ்ரீ குமரன் ஸ்டில், எம்பயர் பிரியாணி, டிக்டாக் பிரியாணி, நியூ மென் பர்னிச்சர் கனகதாரா ரெஸ்டாரன்ட் கைலாஷ் பந்தல் கிரீன் ஹோம் பிராப்பர்ட்டீஸ் ஆகியோருக்கு மாரத்தான் நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.