சின்னமனூர் அருகே குச்சனூரில் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியில் அலுவலகக் கூட்ட அரங்கில் பேரூராட்சி மன்ற தலைவர் பி.டி. ரவிச்சந்திரன் தலைமையில் செயல் அலுவலர் முருகன் துணைத் தலைவர் அ. மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் மாதந்தோறும் நடைபெறும் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது
இந்த கூட்டத்தில் கடந்த ஜீலை 2025 மாத வரவு செலவு மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு மொத்தம் 13 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சி மன்ற கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது இறுதியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் இளவரசு நன்றி கூறினார்