இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், நெருஞ்சிப்பட்டி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் பழுதடைந்ததால், புதிய மையம் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மையம் அமைக்கும் இடத்தைச் சிலர் எதிர்த்து வருகின்றனர்.
மேலும், ஸ்ரீ காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை சிலர் பல ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வருவதாகக் கூறி, அந்த நிலத்தை மீட்டு அங்கன்வாடி மையத்துக்காக ஒதுக்க வேண்டும் எனக் கோரி, 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.