மாதவரம் எம்ஆர்எச் நெடுஞ்சாலை மூலக்கடையில் இருந்து செங்குன்றம் செல்லும் மாதவரம் சின்ன ரவுண்டான வரை குடிநீர் வாரியம் மற்றும் டோரண்ட் கேஸ் குழாய் பதிக்கும் வேலையில் நெடுஞ்சாலையில் பள்ளங்கள் தோண்டி பணிகள்நிறைவு பெற்று அப்பள்ளங்களை சரிவர சீரமைக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அதனை செம்மண் போட்டு தற்காலிகமாக மூடி வைத்துள்ளனர்.

இதன் காரணமாக அவ்வழியே செல்லும் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை ஆயிரக்கணக்கில் செல்லும்போது மண்புழுதி ஏற்பட்டு அருகில் இருக்கும் இனிப்புகள்கடை , உணவகங்கள் மற்றும் துணிக்கடைகளிலும் வியாபார ஸ்தலங்களில் உள்ள கடைகளிலும் மண்புழுதிகள் வாரி இறைக்கும் சூழலால் பொதுமக்கள் அனைவருக்கும் பெறும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்படியே வரும் பள்ளி குழந்தைகள் முதல் மருத்துவமனை செல்லும் நோயாளிகள் வரை பாதிக்கப்படும் சூழல் உள்ளது . மேலும் புழல் சிறையில் இருந்து மாதவரம் நீதிமன்றத்திற்கு வரும் கணரக வாகனங்கள் மற்றும் சொகுசு வாகனங்களில் இருந்து ஏற்படும் புழுதியால் பொதுமக்கள் மிகவும் அவதியுறுகின்றனர்.

இதன் காரணமாக நோய் பரவும் சூழல் உள்ளதால் அருகில் மாகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளது இதில் உள்ள அதிகாரிகள் கூட அதனை கண்டு கொள்ளாமல் மெத்தமாக செயல்படுவதால் பொதுமக்கள் மிகவும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

மேலும் சாலைகள் நடுவில் பள்ளங்கள் தோண்டி அதனை சுற்றி வேலிகள் அமைத்து வாகனங்கள் அதனை சூழ்ந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது.

இதனை உடனே ராம்கி அதிகாரிகள் நெடுச்சாலை துறை அதிகாரிகள் சாலையை சீரமைத்து ஆவண செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *