செங்காட்டுப்பட்டியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு-துறையூர் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகார்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி இந்திரா காலனி,வீரபுரம் தெருவில் தனி நபர் ஒருவர் பொது பாதையை ஆக்கிரப்பு செய்துள்ளதாக 20/08/2025 அன்று துறையூர் வட்டாட்சியர் சிவகுமாரிடம் புகார் அளித்துள்ளனர்.
செங்காட்டுப்பட்டி வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள இந்திரா காலனி, வீரபுரம் தெருவில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சுமார் 26 நபர்களுக்கு தமிழ்நாடு அரசு 1984 ஆம் ஆண்டு இலவசமாக வீட்டுமனை வழங்கி உள்ளது. இந்திரா காலனி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த காலனியில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் வீடு கட்டி வசித்து வருகிறார்கள்.
இந்த காலனியில் வசிக்கும் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் சென்று வரக்கூடிய பொது பாதையை (சர்வே எண் 199/1எ, 200/23) அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் அனுராகவன் என்பவர் பல வருடமாக ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், தற்போது சுவர் எழுப்பியும் உள்ளார்.
அந்த இடத்தை வட்டாட்சியர் பார்வையிட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ள பொது பாதையை மீட்டு தருமாறு இந்திரா காலனி வீரபுரம் தெரு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சுமார் 50 பேர் வட்டாட்சியர் சிவக்குமாரிடம் மனு அளித்துள்ளனர்.மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் இது சம்பந்தமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்