திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வைரிசெட்டி பாளையம் மேட்டு குரும்ப தெருவில் லோகேஷ் என்பவர் தன் வீட்டுக்கு முன் அரசுக்கு சொந்தமான சிமெண்ட் சாலையில் மண்ணை கொட்டி போக்குவரத்து இடையூறு செய்வதாகவும், கழிவுநீர் கால்வாயில் அடைந்துள்ளதாகவும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஜெகநாதன் ஆகியோர் சொல்லியும் மண்ணை அல்லாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி மற்றும் செந்தில்குமாரிடமும் புகார் அளித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து 21/08/ 2025 அன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், பழனிசாமி மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் ஆகியோர் போலீசார் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிப்பு செய்துள்ள மண்ணையும் கழிவுநீர் கால்வாயில் கொட்டியிருந்த மண்ணையும் அப்புறப்படுத்தி னர்.
இந்தப் பாதை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இந்த பொது பாதையை யாரும் மறிக்கவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்