கரூர் செய்தியாளர் மரியான் பாபு
வன்னியர் மக்கள் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சருக்கு மரியாதை செலுத்தினர்.
கரூர் மாவட்டத்தில் கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல், நாடக மேடை அமைத்தல், குடிநீர் திட்டப் பணி, பயணியர் நிழற்குடை, சமுதாயக்கூடம் என பல்வேறு பணிகளை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக அரங்கநாதன் பேட்டை, சேனைப்பாடி கிராமத்தில் நலத் திட்ட பணிகளை மேற்கொண்டு வருகை புரிந்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில் பாலாஜி க்கு வன்னியர் மக்கள் கட்சியின் சார்பில் கரூர் மாவட்ட செயலாளர் சிதம்பரம் கண்டர் தலைமையில் சால்வை அணிவித்து மரியாதை செய்து வரவேற்றார் இந்நிகழ்வில் வன்னியர் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.