மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் 1-ந் தேதி நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை.

சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கும், ஆவணி மூலத்திருவி ழாவில் சுந்தரேஸ்வரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும். அதிலும் சிவபெருமான் மதுரையில் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல்களை பக்தர்களுக்கு விளக்கும் வகையில், ஆவணி மூலத்திருவிழாவில் அலங்காரங்கள் நடைபெறும்.

சிறப்புகள் வாய்ந்த இந்த ஆவணி மூலத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையொட்டி சுவாமி சன்னதி முன் புள்ள கொடிமரத்துக்கு பூஜைகள், அலங்காரம் நடைபெற்று கொடியேற் றம் நடந்தது. அங்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவில் வருகிற 25-ந் தேதி வரை 2-ம் பிரகா ரத்தில் சந்திரசேகரர் வீதி உலா நடை பெறுகிறது அதை தொடர்ந்து சிவபெருமான் திருவிளையாடல் அலங்காரம் தொடங் குகிறது. 26-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம். 27-ந் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 28-ந் தேதி மாணிக் கம் விற்ற லீலை, 29-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 30-ந் தேதி உலவாக்கோட்டை அருளல், 31-ந் தேதி அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வர லாற்று லீலை நடைபெறும்.


வருகிற செப்டம்பர் 1-ந் தேதி காலையில், சுவாமி வளையல் விற்ற அலங்காரம், அன்று இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் நடக்கிறது.
2-ந் தேதி நரியை பரியாக்கிய திரு விளையாடல், 3-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்தது, 4-ந் தேதி விறகு விற்ற லீலை, 5-ந்தேதி சட்டத்தேர் வீதி உலா வும், இரவு சப்தாவர்ண சப்பரத்தில் வீதி உலாவும் நடைபெறும். 6-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர், அதிகாரிகள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *