கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் குறித்து பேசும்பொழுது அறிவியல் மனப்பான்மை என்பது, எதையும் கேள்வி கேட்டு, ஆராய்ந்து, பகுத்தறிந்து புரிந்துகொள்ளும் ஒரு மனநிலை. இது மூடநம்பிக்கைகளை ஒதுக்கி வைத்து, உண்மையை அறியும் ஆர்வம் கொண்டது. ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.
அறிவியல் மனப்பான்மையின் முக்கிய அம்சங்களான கேள்வி கேட்டல்
எதற்கும் ஏன், எப்படி என்று கேள்வி கேட்டு, அதற்கான காரணங்களைத் தேடுவது.
ஆராய்ச்சி செய்தல்,தகவல்களைச் சேகரித்து, ஆராய்ந்து, உண்மையைக் கண்டறிய முயற்சிப்பது பகுத்தறிதல்,தர்க்கரீதியாகச் சிந்தித்து, எந்த முடிவையும் ஆதாரங்களின் அடிப்படையில் எடுப்பது சந்தேகப்படுதல்,எதையும் அப்படியே நம்பாமல், கேள்விக்கு உட்படுத்தி, அதன் உண்மைத் தன்மையை ஆராய்வது திறந்த மனதுடன் இருத்தல்,
புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கும், பழைய கருத்துக்களை மறுபரிசீலனை செய்வதற்கும் தயாராக இருப்பது சகிப்புத்தன்மை,வெவ்வேறு கருத்துக்களை மதிக்கவும், விவாதங்களில் ஈடுபடவும் தயாராக இருப்பது பல்வேறு பகுதிகளிலிருந்து வளர்த்தெடுத்த அறிவியல் மனப்பான்மையின் பலனைத்தான் இன்று நாம் ஒவ்வொருவரும் அனுதினம் அனுபவித்து வருகிறோம்.
நாமும் அறிவியல் மனப்பான்மையுடன் செயலாற்றுவதன் வழியாக மட்டுமே முற்போக்கான சிந்தனையை வளர்க்க முடியும் என்று பேசினார் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் மாத இதழை அனைவரும் வாசிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் நிறைவாக ஆசிரியை சிந்தியா நன்றி கூறினார்.