திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நம்பர் ஒன் டோல்கேட் சமயபுரம் சாலையில் உள்ள வழக்கறிஞர் அலுவலகம், பல் மருத்துவமனை, சூப்பர் மார்க்கெட், ஆகிய பகுதிகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.
தாளக்குடி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது வீட்டுமனை விற்பனை அலுவலகத்தில் பூட்டை உடைத்து 50000 ரொக்கம் திருட்டுப் போய் உள்ளது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மண்ணை
க. மாரிமுத்து.