இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியராக ஸ்ரீராம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கமுதி வட்டாட்சியராக பணிபுரிந்த காதர் முகைதீன் முதுகுளத்தூர் ஆதிதிராவிடர் நல வட்டாட்சியராக பணி மாறுதலில் சென்றதையடுத்து ராமநாதபுரம் கோட்ட ஆய அலுவலராக பணியாற்றி வந்த ஸ்ரீராம் கமுதி வட்டாட்சியராக பொறுப்பேற்றுக்
கொண்டார்.
இவருக்கு துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.