துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை தலைமையில்
புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களின் 73 வது பிறந்த விழா கொண்டாட்டப்பட்டது.

தேமுதிக நிறுவனர்,நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளை (25/08/2025) முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே எஸ் குமார் ஆலோசனை பேரில் துறையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை தலைமையில் துறையூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்குன்னுப்பட்டி- அண்ணா நகர், மேலக்குன்னுப்பட்டி, வேங்கடந்தானூர் உள்ளிட்ட பல கிளைகளில் கழக கொடி ஏற்றி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து துறையூர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகிலுள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளி குழந்தைகளுக்கு மதியம் வடை பாயாசத்துடன் தடபுலாக அறுசுவை உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளுக்காக பள்ளியின் நிர்வாகி மற்றும் மாணவர்கள் பிரார்த்தனை செய்து நன்றி கூறினர்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் துரை சதீஷ்குமார், துறையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், துறையூர் கிழக்கு ஒன்றிய அவை தலைவர் முருகேசன், கிழக்கு ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணசாமி, கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் செந்தில் , ரமேஷ் கிழக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி பிரபாகரன், முன்னாள் ஒன்றிய நிர்வாகி மாமுண்டி மற்றும் கீழகுன்னுபட்டி கிளை கழகச் செயலாளர் வினோத் குமார் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *