பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் ஒக்கினாவா சோஜென்றியூ-கராத்தே பள்ளி மாணவ மாணவிகள் கேலோ இந்தியா சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில்
11 தங்கம் ,8 வெள்ளி,4 வெண்கலம் என வெற்றி பெற்று சாதனை …..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ஒக்கினாவா சோஜென்றியூ-கராத்தே பள்ளி மாணவ மாணவிகள் கேலோ இந்தியா சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று 11 பேர் தங்கப்பதக்கமும் ,8 பேர் வெள்ளி பதக்கமும்,4 பேர் வெண்கலப் பதக்கமும் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
மேலும் தேசிய அளவில் நடைப்பெறும் போட்டியில் கலந்து கொள்ளும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை இந்திய தலைமை பயிற்சியாளர் ரென்ஷி ஜெயராஜ் செயலாளர் புரூஸ்லின் பாராட்டு சான்றிதழ் பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.