தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த தாளநத்தம் பேருந்து நிலையம் அருகில் தேமுதிக நிறுவனர், நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73 வது பிறந்த நாள் விழா கடத்தூர் ஒன்றிய பொருளாளர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரு உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார் அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புக்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், சிவகுமார் உள்ளிட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.