அகில பாரத மக்கள் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு இலவச விநாயகர் சிலை வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை அகில பாரத மக்கள் கட்சியினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்..
இந்நிலையில் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வீடு தோறும் விநாயகர் வீதி தோறும் விநாயகர் எனும் நிகழ்வு அகில பாரத மக்கள் கட்சி சார்பாக நடைபெற்றது..
கோவை வடவள்ளி பகுதியில் மாவட்ட தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் முன்னிலை வகித்தார்..
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் கோவை மாநகர் மாவட்ட தலைவர் சிவராஜ். மற்றும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன்.ஆகியோர் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று இலவசமாக விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டது இதில் 501 விநாயகர் சிலைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது…
நிகழ்ச்சியில், அகில பாரத மக்கள் கட்சியின் மாவட்ட துணை தலைவர் நாராயண சுவாமி. மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ். நிர்வாகிகள் மகேஷ் வினோத். மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்