(26.08.2025) நடைபெறும் அரையிறுதி போட்டிக்கு இந்தியன் வங்கி அணி, இந்திய விமான படை அணி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி மற்றும் கேரளா மாநில மின்சார வாரிய அணிகள் தகுதி

கோயம்புத்தூர், ஆகஸ்ட் 25, 2025 – கோவை பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் 59-வது பிஎஸ்ஜி கோப்பை ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த 23- ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது.

(25.08.2025) மூன்றாம் போட்டியில் பெங்களூரு – பேங்க் ஆப் பரோடா அணியை எதிர்த்து கோவை – ராஜலஷ்மி மில்ஸ் அணி விளையாடியது. இதில் பேங்க் ஆப் பரோடா
அணி 86 – 73 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் புது தில்லி – இந்திய ராணுவ அணியை எதிர்த்து லோனாவாலா – இந்திய கப்பல் படை அணி விளையாடியது. இதில் இந்திய கப்பல் படை அணி 80 – 76 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து மாலை 7.00 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து கேரளா மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 83 – 74 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

நான்காவது போட்டியில் இந்தியன் வங்கி அணியை எதிர்த்து இந்திய விமானப்படை அணி விளையாடியது. இதில் இந்திய விமானப்படை அணி 94 – 87 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

(26.08.2025) நடைபெறும் அரை இறுதி போட்டியில் முதலாவது போட்டியில் இந்தியன் வங்கி அணியை எதிர்த்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி விளையாடுகின்றது.

தொடர்ந்து இரண்டாவது போட்டியில் இந்திய விமானப்படை அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *