மதுரை, பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), இயற்பியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை முதுகலை வெள்ளிவிழா நிதி சொற்பொழிவை நடத்தியது.
சென்னை ARCI எரிபொருள் மின்கலம் (Fuel Cell) தொழில் நுட்ப மைய விஞ்ஞானி டாக்டர். ராமன் வேதராஜன், “எரிபொருள் மின்கலம் தொழில் நுட்பம்: ஒரு மின்வேதியியல் அற்புதம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தனது சொற்பொழி வில் நிலையான மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த எரிசக்தி அமைப்புகளை வளர்ப்பதில் எரிபொருள் மின்கல தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில், ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் கல்வி பரிமாற்றத்தை வலுப்படுத்தும் விதமாக, பாத்திமா கல்லூரி இயற்பியல் துறை மற்றும் கோயம்புத்தூர் மெட்டீரியல்ஸ் ரிசர்ச்சென்டர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது, மேலும்அம்மையத் தின் இயக்குனர் செல்வ சேகர பாண்டியன் நிறைவுரையாற்றி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் எம்.வி, லீனா சந்திரா தலைமையேற்று, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் கல்லூரி செயலர் சகோதரி முனைவர் இக்னேஷியஸ் மேரி மற்றும் முதல்வர் சகோதரி முனைவர் பாத்திமா மேரி ஆகியோரைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். மேலும் இயற்பியல் துறை பேராசிரியர் களால் உருவாக்கப் பட்ட CSIR NET மற்றும் SET பயிற்சிக்கான காணொளிகளை கொண்ட கூகுள் வகுப்பறையை துவக்கி வைத்தார்.
பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவியர், இயற்பியல் மற்றும் வேதியியல் துறை மாணவியர் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்