கோயம்புத்தூர் ஈஸ்ட் ரோட்டரி கிளப் “கேரிங் ஹாண்ட்ஸ்GG 2576339” உலகளாவிய மானிய திட்டத்தின் கீழ், விஜிஎம் மருத்துவமனை & அறக்கட்டளையில் டயாலிசிஸ் மையத்தைத் திறந்து வைத்தது

கோயம்புத்தூர் ஈஸ்ட் ரோட்டரி கிளப் பெருமையுடன் தனது உலகளாவிய மானிய திட்டமான “கேரிங் ஹாண்ட்ஸ் GG 2576339”-ஐ துவக்கி, விஜிஎம் மருத்துவமனை மற்றும் அறக்கட்டளையில் நவீன வசதியுடன் கூடிய டயாலிசிஸ் மையத்தை நிறுவியது.

மொத்தமாக USD 59,000 மதிப்புள்ள இந்த திட்டத்தின் நோக்கம், பொருளாதார வசதியில்லாத சிறுநீரக நோயாளிகளுக்கு தரமான, மலிவான டயாலிசிஸ் சிகிச்சையை வழங்குவதாகும். இதில் விஜிஎம் அறக்கட்டளை, USD 20,000 நிதியை தாராளமாக வழங்கியது. இந்த விழாவில் முதன்மை விருந்தினராக மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் செல்லா கே. ராகவேந்திரன் (ஆர்.ஐ.டி 3206) அவர்கள், சிறப்பு விருந்தினராக PDG Rtn. S. ராஜசேகர், டி ஆர்எப்சி (RID 3206) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், விஜிஎம் மருத்துவமனை தலைவர் Rtn. Dr. VG மோகன் பிரசாத் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் Dr. சுமன் CPS, கிளினிக்கல் & கல்லீரல் நிபுணர் Dr. மித்ரா பிரசாத் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றியவர் Dr மித்ரா பிரசாத். அவர் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் வழிகாட்டியதால் இந்த முயற்சி நனவானது. நிகழ்வில் பேசிய கிளப் தலைவர் Rtn. விஜய் கிருஷ்ணன் R. “சமூகத்தின் முக்கிய சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய, நிலையான சேவைத் திட்டங்களை எங்கள் கிளப் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என்று வலியுறுத்தினார்.

இந்தத் திட்டம் இன்டர்நேஷனல் கிளப் பார்ட்னர் ரோட்டரி கிளப் ஆஃப் துபாய் டவுன்டவுன், சப்போர்ட் கிளப் பார்ட்னர் – ரோட்டரி கிளப் ஆஃப் கோவை ஸ்மார்ட் சிட்டி ஆகியோரின் ஆதரவுடன் நடைமுறைக்கு வந்தது. இது ரோட்டரியின் உலகளாவிய சேவை உணர்வை வெளிப்படுத்துகிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் Rtn. ராஜ் சித்தார்த் 5, செயலாளர் Rtn. செல்வகுமார் TRF தலைவர் Rtn. J சஞ்சீவி குமார் ஆகியோர், கிளப் நிர்வாகத்தின் தலைமையில் தங்கள் பங்களிப்பைச் செய்தனர்.

“இந்த டயாலிசிஸ் மையம், ‘சர்விஸ் அபவ் செல்ஃப்’ எனும் ரோட்டரியின் பணி நோக்கில் ஒரு முக்கிய மைல்கல்லாரும். இது அத்தியாவசிய மருத்துவ அடித்தளங்களை கொண்டவர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்வதை உறுதி செய்கிறது.”

விஜிஎம் அறக்கட்டளை மனமுள்ள நற்பண்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்களை இஃப்ட் அ டயாலிசிஸ்” திட்டத்தில் பங்கேற்க அழைக்கிறது. டயாலிசிஸ் சிகிச்சை செலவுகளை நிதியுதவி செய்வதன் மூலம், பல குடும்பங்களின் சுமையை குறைத்து உயிர்களை காப்பாற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *