தேமுதிக து.மே.ஒ.செயலாளர் சென்னை பிரியாணி சரவணன் தலைமையில் விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் விழா
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியம் கலிங்கமுடையான்பட்டியில் தேசிய முற்போக்கு திராவிட கழக கிளை சார்பில் (25/08/2025) கழக நிறுவனர், முன்னாள் எதிர் கட்சி தலைவர், நடிகர் விஜயகாந்தின் 73 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.வடக்கு மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் ஆலோசனை பேரில் மேற்கு ஒன்றிய செயலாளர் “சென்னை பிரியாணி” சரவணன் தலைமையில் கலிங்கமுடையான்பட்டி கிளை கழகத்தில் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி தேமுதிக கொடியேற்றி கேப்டனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா வழங்கி, பள்ளி குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார்,தொகுதி பொறுப்பாளர் சதீஷ், நகரச் செயலாளர் சங்கர், சேகர், மணிகண்டன், கிருஷ்ணசாமி, சதீஷ்குமார், கொத்தம்பட்டி குமார், கிளை பொறுப்பாளர் செல்வராஜ், தாமரைச்செல்வன், ராமச்சந்திரன், பிரபாகரன், ராஜகோபால், சௌந்தரராஜன், மணிகண்டன், ரமேஷ், பாலமுருகன், சுப்ரமணி, பாக்கியராஜ், கண்ணன் மற்றும் கழகத்தினர் பொதுமக்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்