ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா!-வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் தங்கம், வெள்ளி நாணயம்பரிசு!

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு இளம் ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான நடத்திய ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா
திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்யா குளிர் அரங்கில் நடைபெற்றது.

டிசைன் ஓவிய பள்ளி தாளாளர் மதன் தலைமை வகித்தார். முதல்வர் நஸ்ரத் பேகம் துவக்க உரையாற்றினார். திருச்சி மாவட்ட உதவி ஆட்சியர் சேத்ரி மயும் தீபி சானு, திரைப்பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ், போத்தீஸ் மத்திய மண்டல துணைத்தலைவர் முத்துகுமரன் ஆகியோர், கல்விக் குழு தலைவர் பொற்கொடி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும் பரிசுகளையும் வழங்கினர்.

எல்கேஜி, யுகேஜி மாணவர்களின் வண்ணம் தீட்டும் போட்டியில்
காவேரி குளோபல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் ஜோகன் முதல் பரிசும், ராஜாஜி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் சாய்சரண் இரண்டாம் பரிசும், தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் மாணவர் அஸ்வத் பழனியப்பன் மூன்றாம் பரிசும் பெற்றனர்.ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கை காட்சியில் இனிப்புகள் (கற்பனை காட்சி ) தலைப்பில் கேம்பியன் இந்தியன் ஹையர் செகண்டரி பள்ளி அஸ்விகா முதல் பரிசும், செவன்த் டே அட்வென்டிஸ்ட் ஹையர் செகண்டரி பள்ளி மாணவி பூர்ண ஸ்ரீ இரண்டாம் பரிசும் , ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவி வைஷ்ணவி மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்குங்கள் தலைப்பில் கவர்ன்மெண்ட் மாடல் ஹையர் செகண்டரி பள்ளி மாணவி யோகனி முதல் பரிசும் பிஎச்எல் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளி மாணவி கிளாடிக் கிறிஸ்டில்டா இரண்டாம் பரிசும், ஆர்.எஸ்.கே. ஹையர் செகண்டரி பள்ளி சாந்ரிதா மகில் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நம் கலாச்சாரத்தை கொண்டாடுவோம் தலைப்பில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர் ராகவ் கிருஷ்ணா முதல் பரிசும், ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் மகிழன் இரண்டாம் பரிசும் , ஹோலி கிராஸ் கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி பள்ளி மாணவி வீரலட்சுமி மூன்றாம் பரிசு பெற்றனர்.ஓவியப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்றமைக்கான சான்றிதழும் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் தங்கம், வெள்ளி நாணயங்களும் பரிசளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *