செங்குன்றம் செய்தியாளர்

செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் பாலாஜி தலைமையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் பாதுகாப்பு விழிப்பு உணர்வு குறித்து கலந்தாய்வுக் கூட்டம் செங்குன்றம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் காவல் உதவி ஆணையர்கள் செங்குன்றம் ராஜா ராபர்ட் ,அம்பத்தூர் பிராங்கிளின் டி ரூபன், பொன்னேரி சங்கர் , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாளை 27 ஆம் தேதி தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு
விநாயகர் சிலைகள் அரசு விதிகளுக்கு உட்பட்ட வகையில் பத்தடி உயரம் மட்டுமே இருக்க வேண்டும், ரசாயனக் கலவை விநாயகர் சிலைகள் இருக்க கூடாது, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையிலான காகிதம் மற்றும் களிமண்ணால் ஆன விநாயகர் சிலை மட்டும் பயன்படுத்த வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களும் சிலைகளுக்கு அருகில் இருக்க கூடாது என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளையும் விநாயகர் சிலை வைத்து வழிபடும் முறையையும் ஊர்வலங்கள் செல்லும்போது எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது
விநாயகர் சிலைகள் எந்தெந்த பகுதிகளில் வைப்பது, அதை எப்படி எடுத்துச் செல்வது, கரைப்பது உள்ளிட்ட வழிமுறைகள், குறித்து கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது ஆலோசனைக் கூட்டத்தில் செங்குன்றம், சோழவரம், அம்பத்தூர், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த போலீஸ் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆன்மிக பெரியோர்கள், கிராம நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.