செங்கல்பட்டு மாவட்டம் சிச்தாமூர் கிழக்கு ஒன்றியத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் 73 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 73 வது பிறந்தநாள் முன்னிட்டு
கேப்டன் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் ஆலோசனைப்படி சித்தாமூர்
கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரகாந்த் தலைமையில் சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட முகுந்தகிரி ஆற்காடு நுகம்பல் காவனூர் வில்லிப்பாக்கம் சூனாம்பேடு 57 கொளத்தூர் கடுகலூர் கரிக்கந்தாங்கள் உள்ளிட்ட பகுதிகளில்
கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் அவை தலைவர் நடராஜன் ஒன்றிய பிரதிநிதி சக்திவேல் கேப்டன் மன்ற துணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் மூர்த்தி அசோக் ஏழுமலை சண்முகம் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.