முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் ஏற்கனவே நடைபெற்று வருகிறது இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யும் வகையில் இன்று சென்னையில் தமிழக முதலமைச்சர் துவக்கி வைத்தார்
இதனை அடுத்து தூத்துக்குடி உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஆண்டு திருச்சிலுவை ஆரம்பப்பள்ளி வளாகத்தில் ஆளை உணவு திட்டம் துவக்க விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் பானோத்ம்ருகேந்தர்லால் தலைமை தாங்கினார் நகராட்சி மேயர் ஜெகன் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் சரவணகுமார் நகராட்சி துணைப் பொறியாளர் சரவணன் மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன் சுகாதார அலுவலர் பொறியாளர் அமல்ராஜ் துணை மேயர் ஜெனிட்டா. மண்டல தலைவர் கலைச்செல்வி மாமன்ற உறுப்பினர் பேபிஏஞ்சலின். மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார் வட்டச் செயலாளர் பொன்ராஜ் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர் மற்றும் அரசு அதிகாரிகள் திமுகவினர் கலந்து கொண்டனர்
காலை உணவு திட்டம் விரிவாக்கம் குழந்தைகளுக்கு வழங்கிவிட்டு மாநகராட்சி மேயர் ஜெகன் குழந்தைகளிடம் காலையில் உணவு சாப்பிடுவீர்களா என்று கேட்டபோது குழந்தைகள் நாங்கள் சாப்பிட்டது கிடையாது என்று குழந்தைகள் மாநகராட்சி மேயர் ஜெகனிடம் குழந்தைகள் கூறினார்கள் இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
தமிழகம் முதலமைச்சரின் இந்த உன்னதமான திட்டம் குழந்தைகள் இனி காலையில் பள்ளிக்கு கிளம்பி வந்தவுடன் பள்ளியில் வழங்கப்படும் உணவு குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார் காலை உணவு திட்டத்தின் மூலம் ஏற்கனவே அரசு பள்ளிகள் 18 பள்ளிகளில் படிக்கும் 2597 மாணவ மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர்
இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதின் அடிப்படையில் மாநகர் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளிகள் 54 அதன் மூலம் பயனடையும் மாணவ மாணவிகள் 5424 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 72 இதன் மூலம் மொத்தம் மாணவர் பகுதியில் மட்டும் 8021 மாணவ மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயனடைகின்றனர் திங்கட்கிழமை வெண்பொங்கல் காய்கறி சாம்பார் வழங்கப்படுகிறது
செவ்வாய்க்கிழமை ரவா கிச்சடி காய்கறி சாம்பார் புதன்கிழமை வெண்பொங்கல் காய்கறி சாம்பார் வியாழக்கிழமை அரிசி உப்புமா காய்கறி சாம்பார் வெள்ளிக்கிழமை சாமியா கிச்சடி காய்கறி சாம்பார் வாரத்தில் 5 நாட்கள் மாநகர் பகுதியில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த உணவுகள் வழங்கப்படுகிறது என்று மாநகராட்சி மேயர் ஜெகன் கூறினார்